இடுகைகள்

சிறப்புடைய இடுகை

கல்லாபுரம் மலைக்கோட்டை

படம்
இவ்வூர் ஆன்பொருனை ஆற்றின் தென்கரையில் அணையிலிருந்து ஐந்து கி.மீ தொலைவில் உள்ளது. இவ்வூருக்கு அருகில் உள்ள மலைப்பகுதியில் திப்பு சுல்தான் கோட்டை ஒன்று உள்ளது. இக்குறிப்பை கோவை மாவட்ட தொல்லியல் கையேடு. பக்கம் 104 இக்குறப்பை படித்ததிலிருச்து எனக்கு நீண்ட நாட்களாக மலைமேல் செல்ல வேண்டும் என்ற எண்ணம் இருந்த்து. ஆனால் இதுநாள் வரை எனக்கு சந்தர்பம் அமையவில்லை. என்னோடு பணிபுரிந்த நண்பர் பாபு அவர்கள் (ஆலாம்பாளையம்) ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் அந்த மலைக்கு சென்று மலைமேல் இருக்கும் பெருமாள் கோவிலுக்கு தவறாமல் சென்று வருவதாக கூறினார். எனக்கு ஒரு துணை கிடைத்துவிட்ட சந்தோஷத்தில் இருவரும் புரட்டாசி சனிக்கிழமை மதியம் மூன்று மணியளவில் மலை அடிவாரத்தில் மேலே செல்ல ஆராம்பித்து கோட்டையின் நுழைவு வாயில் முற்றிலும் அழிந்து போன நிலையில் தென்பட்டது. அழிந்து போன கோட்டையின் சுவருக்கு அருகில் துருவக் கோட்டை பெருமாள் கோவில் செல்லும் வழி என்று அறிவிப்பு பலகை ஒன்று இருந்தது. மெல்ல நாங்கள் நடக்க ஆரம்பித்தோம் கோட்டையின் வழி வலைந்து வலைந்து சங்க்கிரி கோட்டையின் அமைப்பை போன்றே இருந்தது.  இரவும் பகலும் உரசிக்க…

நன்றி மறவா ஜீவனுக்காக நன்றியுடன் எடுக்கப்பட்ட நடுகல்

படம்
#எடுத்தனூர்நடுகல்

நன்றி மறவா  ஜீவனுக்காக நன்றியுடன்  
எடுக்கப்பட்ட நடுகல்

சங்க இலக்கியத்தில் நாய்கள்

பெருங்கற்காலம் தொட்டே மனிதர்களுடன் பயணித்து வருகின்றன நாய்கள் வேட்டைக்காக வும் காவலாகவும் செல்லப் பிராணியாகவும்  நாய்களை வளர்த்து வருகின்றனர் நாய்களை சங்க இலக்கியங்கள் ஞமலி, ஞாளி என்று கூறுகின்றன. சினமுற்ற வேட்டை நாய்களை ‘கதநாய்’ என்றும் குறிப்பிட்டுள்ளன

மான், முயல், பன்றி, உடும்பு போன்றவற்றை வேட்டையாடுவதில் நாயின் பங்கு குறிப்பிடத்தக்கது. சங்ககாலத் தமிழ்ச் சமுதாயத்தில் ஒரு ஆண்மகன் வீட்டைவிட்டு வெளியே செல்லும்போது, கையில் ஒரு வேலுடன் வேட்டைநாய் பின்தொடரச் செல்வது பெருவழக்காக இருந்தது. வீட்டுநாய், வேட்டைநாய்களைப் பற்றி மட்டுமின்றி காடுகளில் வாழும் செந்நாய்களைப் பற்றியும் நீர்நிலைகளில் வாழும் நீர்நாய்களைப் பற்றியும் சங்ககாலப் புலவர்கள் இலக்கியங்களில் பதிவுசெய்து வைத்துள்ளனர்.

‘சொன்றி ஞமலி தந்த மனவுச்சூல் உடும்பின்

வறைகால் யாத்தது வயின்தொறும் பெறுகுவிர்’

என்ற பெரும்பாணாற்றுப்படை வரி, வேட்டுவக் குடிகளான எயினர் இன மக்கள், நாய்களைக் கொண்டு வேட்டையாடிய ஊன் உணவைப் பற்றிக் கூறுகிறது.

‘கான் உறை வாழ்க…

எனது யுடுப் சேனல் கடிகை

படம்
நண்பர்களுக்கு வணக்கம் கடிகை youtube சேனல் ஒன்று தொடங்கி இருக்கிறோம் இது வரலாறு கல்வெட்டுக்கள் தொல்லியல் பெருங்கற்காலச் சின்னங்களை பற்றியும் மாதம் ஒரு தொல்லியல் அறிஞர்களுடன் நேர்காணல் செய்து வெளியிட இருக்கிறோம் எனது பதிவுக்கு எப்போதும் ஆதரவளித்து வரும் நண்பர்கள் இந்த முயற்சிக்கும் எனக்கு ஆதரவு அளிக்குமாறு வேண்டிக்கொள்கிறேன் ஆயிரம் subscribe இருந்தால்தான் எனது சேனலை நான் மேற்கொண்டு நடத்த முடியும் நண்பர்கள் தயவு செய்து subscribe செய்து எனது இந்த முயற்சிக்கு ஊக்கமும் உற்சாகமும் அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றென்றும் அன்புடன் சதாசிவம் குறிப்பு தமிழில் தொல்லியலக்கு என்று யூடியூப் சேனல் இல்லை இதுவே முதல் சேனல் இன்று நம்மிடம் ஒவ்வொருவரின் கையிலும் டிசிஎல் கேமராக்கள் மொபைல் கேமராக்கள் என கையில் வைத்துக் கொண்டு காணும் காட்சிகளை எல்லாம் புகைப்படம் எடுத்து வருகிறோம் இதே இருநூறு ஆண்டுகளுக்கு முன்னால் புகைப்படக்கருவிகள் வருவதற்கு முன்னால் ஆங்கிலேயர் காலத்தில் தமிழகத்தில் இருந்த ஆங்கிலேயர்கள் நம் ஊரின் இயற்கை காட்சிகளையும் அரண்மனைகளையும் கோட்டை கோவில்களையும் ஓவியங்களாக வரைந்து அதை வெளிநாட்டிற்கு க…

புறநானூறு # 269

படம்
கட்டுரையாளர்  நன்றி பெளசியா 


புறநானூறு # 269 திணை : வெட்சி துறை : உண்டாட்டு குயில்வாய் அன்ன கூர்முகை அதிரல் பயிலாது அல்கிய பல்காழ் மாலை மையிரும் பித்தை பொலியச் சூட்டிப் புத்தகல் கொண்ட புலிக்கண் வெப்பர் ஒன்றுஇரு முறையிருந்து உண்ட பின்றை உவலைக் கண்ணித் துடியன் வந்தெனப் பிழிமகிழ் வல்சி வேண்ட மற்றது கொள்ளாய் என்ப கள்ளின் வாழ்த்திக் கரந்தை நீடிய அறிந்துமாறு செருவின் பல்லான் இனநிரை தழீஇய வில்லோர்க் கொடுஞ்சிறைக் குரூஉப்பருந்து ஆர்ப்பத் தடிந்துமாறு பெயர்த்ததுஇக் கருங்கை வாளே பாடியவர்: அவ்வையார். விளக்கம் : குயிலின் அலகு போன்ற கூர்மையான மொட்டுக்களையுடைய காட்டு மல்லிகைக் கொடியில் உள்ள பூக்களோடும், விதைகளோடும் நெருக்கமாகத் தொடுக்கப்படாத மாலையை கரிய பெரிய தலை முடியில் அழகுடன் சூடி, புதிய அகன்ற கலத்தில், புலியின் கண்போன்ற நிறத்தையுடைய மதுவை இரண்டுமுறை இங்கே இருந்து நீ உண்ட பின், பசிய இலைகளைக் கலந்து தொடுத்த மாலையை அணிந்த துடி கொட்டுபவன் அதைக் கொட்டி “போர் வந்தது” என்று அறிவித்தான்.

சோழர்களும் கொங்குநாடும் ர. பூங்குன்றன்

சோழர்களும் கொங்குநாடும் ர. பூங்குன்றன்
கொங்குநாற்புறமும் மலைகளால் சூழப்பெற்ற பீடபூமி. இந்த நாட்டின் பெயர்க்காரணத்தைஅறிந்து கொள்ள பல ஆய்வாளர்கள் முயன்றுள்ளனர். கொங்கு என்ற சொல்லுக்கு மது, தேன், காடு, கிழக்கு என்று பல பொருள்களைக் கண்டுள்ளனர். தேவநேயப் பாவாணர்அவர்கள் நிலவியல் அடிப்படையில் இந்தப் பெயர் உருவாகியிருக்கலாம் என்றுகூறுவார். இந்தநாட்டின் தரைப்பகுதி குவியல் குவியலாக நிலை மெற்றுள்ளது.பழந்தமிழில் குவிந்திருக்கும் நிலையை கொம், கொம்மை, கொங்கை என்று அழைக்கப்பெற்றது. அந்த வகையில் கொங்கம், கொங்கு என்ற பெயர்கள் வந்திருக்கலாம்.கிழக்கு என்ற பொருளில் இச்சொல் வழங்கியிருக்கலாம் என்று பேராசிரியர்நாச்சிமுத்து அவர்கள் கூறுவார். தோத மொழியில் கொங்மாய் என்ற சொல் வடகிழக்குபருவ மழையைக் குறித்துவந்தது. இன்னும் கொங்குநாட்டில் இந்த மழையைக் கொங்கமழை என்று கூறுவர்.