கல்லாபுரம் மலைக்கோட்டை

 இவ்வூர் ஆன்பொருனை ஆற்றின் தென்கரையில் அணையிலிருந்து ஐந்து கி.மீ தொலைவில் உள்ளது. இவ்வூருக்கு அருகில் உள்ள மலைப்பகுதியில் திப்பு சுல்தான் கோட்டை ஒன்று உள்ளது. இக்குறிப்பை கோவை மாவட்ட தொல்லியல் கையேடு. பக்கம் 104 இக்குறப்பை படித்ததிலிருச்து எனக்கு நீண்ட நாட்களாக மலைமேல் செல்ல வேண்டும் என்ற எண்ணம் இருந்த்து. ஆனால் இதுநாள் வரை எனக்கு சந்தர்பம் அமையவில்லை. என்னோடு பணிபுரிந்த நண்பர் பாபு அவர்கள் (ஆலாம்பாளையம்) ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் அந்த மலைக்கு சென்று மலைமேல் இருக்கும் பெருமாள் கோவிலுக்கு தவறாமல் சென்று வருவதாக கூறினார். எனக்கு ஒரு துணை கிடைத்துவிட்ட சந்தோஷத்தில் இருவரும் புரட்டாசி சனிக்கிழமை மதியம் மூன்று மணியளவில் மலை அடிவாரத்தில் மேலே செல்ல ஆராம்பித்து கோட்டையின் நுழைவு வாயில் முற்றிலும் அழிந்து போன நிலையில் தென்பட்டது. அழிந்து போன கோட்டையின் சுவருக்கு அருகில் துருவக் கோட்டை பெருமாள் கோவில் செல்லும் வழி என்று அறிவிப்பு பலகை ஒன்று இருந்தது. மெல்ல நாங்கள் நடக்க ஆரம்பித்தோம் கோட்டையின் வழி வலைந்து வலைந்து சங்க்கிரி கோட்டையின் அமைப்பை போன்றே இருந்தது.  இரவும் பகலும் உரசிக்கொள்ளும் அந்தி வேளையில் மலை உச்சியை அடைந்தோம்.  மலை உச்சிக்கு அருகில் நூறு அடி நீளத்திற்க்கு  வற்றாத சுனை ஒன்றும் தீபக் குளம் ஒன்று மட்டும் முற்றிலும் அழியாமல் இருப்பது இது ஒன்று மட்டுமே.   மலை உச்சியில் துருவு பெருமாள் என்ற கோயில் உள்ளது. கோயிலில் விக்கிரகங்கள் இல்லை. இக்கோயிலின் கட்டக்கலை பாளையக்கரார்களால் மாற்றி அமைத்திருக்க வேண்டும். இக்கோயிலுக்கு அருகில் ஒரு முஸ்லிம் இனத்தவரின் சமாதி ஒன்றும் உள்ளது. இச்சமாதிக்கு அடிக்கடி முஸ்லிம் சகோதர்களும் வருவார்கள். மலை சுற்றிலும் ஆங்காங்கே செங்கல் துண்டுகள் வட்ட வடிவ வீடுகள் இருந்த்தற்கான அடையாளங்களும் காணப்படுகிறது. இம்மலை செஞ்சி, சங்ககரி போன்ற மலைகோட்டைகளில் இருக்கும் அமைப்புகளும் இங்கும் இருக்கின்றது. மலையில் இருந்து இருநூறு மீட்டர் கீழே குகையும் உள்ளது என்றும் அங்கே தனியாக செல்வது ஆபத்து என்று நண்பர் பாபு தெரிவித்தார். கார்த்திகை ஜோதி அன்று ஏராளமான மக்கள் மேலே வருவார்கள் என்றும், அவர்கள் அனைவரும் அந்த குகையில் தங்குவார்கள் என்றும் கூறினார்.  இக்கோட்டை அமாரவதி ஆற்றின் முகதுவாரத்தில் அமைந்துள்ளது. அமாரவதியில் இருக்கும் மக்கள் இக்கோட்டையை துருவக்கோட்டை என்றும். துருவபெருமாள் கோவில் என்று கூறிகிறார்கள். கல்லாபுரத்தில் இருக்கும் மக்கள் இக்கோட்டையை திப்புசுல்தான் கோட்டை என்றும் கூறிகிறார்கள். இக்கோட்டை யார் கட்டியது என்று இதுவரை வந்த வரலாற்று நூற்களில் இல்லை. மலைமேல் தேடியதில்கல்வெட்டுகளும் ஒன்றும் கிடைக்கவில்லை. சிதறிக்கிடக்கும் செங்கல்களில்  10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த செங்கற்களும், விஜய நகர செங்கற்களும் கிடைக்கின்றது. ஒரு நள் இரவும் மலைமீது தங்கி அடுத்த நாள் காலை நாங்கள் இருவரும் கீழே இறங்க மிகவும் கஷ்டபட்டோம். இரவு முழுக்க மழை பெய்ந்ததால் பாறை மிகவும் வழுக்கியது. 






















கருத்துரையிடுக

1 கருத்துகள்

தொடர்புக்கு

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

இதுவரை இந்த வலைப்பூவுக்கு வந்து வாசித்தவர்கள்