சோழர்களும் கொங்குநாடும் ர. பூங்குன்றன்

சோழர்களும் கொங்குநாடும்
ர. பூங்குன்றன்

கொங்கு நாற்புறமும் மலைகளால் சூழப்பெற்ற பீடபூமி. இந்த நாட்டின் பெயர்க்காரணத்தை அறிந்து கொள்ள பல ஆய்வாளர்கள் முயன்றுள்ளனர். கொங்கு என்ற சொல்லுக்கு மது, தேன், காடு, கிழக்கு என்று பல பொருள்களைக் கண்டுள்ளனர். தேவநேயப் பாவாணர் அவர்கள் நிலவியல் அடிப்படையில் இந்தப் பெயர் உருவாகியிருக்கலாம் என்று கூறுவார். இந்தநாட்டின் தரைப்பகுதி குவியல் குவியலாக நிலை மெற்றுள்ளது. பழந்தமிழில் குவிந்திருக்கும் நிலையை கொம், கொம்மை, கொங்கை என்று அழைக்கப் பெற்றது. அந்த வகையில் கொங்கம், கொங்கு என்ற பெயர்கள் வந்திருக்கலாம். கிழக்கு என்ற பொருளில் இச்சொல் வழங்கியிருக்கலாம் என்று பேராசிரியர் நாச்சிமுத்து அவர்கள் கூறுவார். தோத மொழியில் கொங்மாய் என்ற சொல் வடகிழக்கு பருவ மழையைக் குறித்துவந்தது. இன்னும் கொங்குநாட்டில் இந்த மழையைக் கொங்க மழை என்று கூறுவர்.

கொங்கு நாட்டின் எல்லைகள்

வடக்கில் தலைமலை, தெற்கில் பழனி மலை, மேற்கில் வெள்ளியங்கிரி, கிழக்கில் குளித்தலை இந்த நான்கு எல்லைகளை உள்ளடக்கி நிற்பதே பண்டைய கொங்கு. வீ.மாணிக்கம் உட்பட்ட கொங்கு வரலாற்றாசிரியர்கள் தருமபுரிப் பகுதியையும் கொங்கு நாட்டிற்குள் அடக்குவர். இது தற்கால மாவட்ட எல்லைகளால் வந்த நிலை. பிரிந்தானியர்கள் சேலம் மாவட்டத்தை உருவாக்கியபோது தருமபுரிப் பகுதியையும் சேலம் மாவட்டத்திற்குள் வைத்திருந்தனர். இன்றைய சேலம் பகுதி வடகொங்கு என்று அழைக்கப்பெற்றருந்தது. அதனால் அம்மாவட்டத்திற்குள்பட்ட தருமபுரி பகுதியும் கொங்கு நாடு என்று  கருதப்பெற்றது.

முதலாம் ஆதித்தனின் கொங்கு வெற்றி
விசயாலயனின் மகன் முதலாம் ஆதித்தன் தொண்டை நாட்டை வென்ற செய்தி தொண்டைநாடு பாவிய இராசகேசரி என்று கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. ஆனால் கொங்கு நாடு பாவிய என்று எங்கும் குறிப்பிடம் பெறவில்லை. கொங்குதேச ராஜாக்கள் என்ற கொங்கு வரலாற்று நூலில் ஆதித்தவர்மன் கொங்கு நாட்டு வேடராஜாக்களை வென்றான் என்றும், தளவன்புரம் என்ற ஊரில் முடி சூட்டிக் கொண்டான் என்றும் கூறப்பெறுகின்றது. கொங்குநாடு சோழர் வருகைக்கு முன் வேட்டுவக்குடித் தலைவர்கள் நடந்த நிலையில் வேடராஜாக்களை வென்றான் என்று கூறப்பெறுகிறான். பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரியார் அவர்கள் கொங்கு தேசராஜாக்கள் என்ற நூலின் நம்பகத்தன்மையை ஏற்றுக்கொண்டாரில்லை. இருப்பினும் ஆதித்தன் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் கோவைக்கருகில் ஒரு கல்வெட்டு கண்டுபிடிக்கப் பெற்றுள்ளது. அக்கல்வெட்டு கி.பி. 9 ஆம் நூற்றாண்டு வட்டெழுத்திலும் தமிழ் எழுத்திலும் வடிக்கப் பெற்றுள்ளது, அக்கல்வெட்டின் வாசகம் பின்வருமாறு

(இங்கு படம் வரவேண்டம்)

" ஸ்வஸ்தி ஸ்ரீ கோ இராஜகேசரிப்
பெருவழி
இது வட்டெழுத்தில் அமைந்த வாசகம். மேலும் ஒரு வெண்பா பாட்டும்  பொறிக்கப் பெற்றுள்ளது.
திருநிழலு மன்னு
யிருஞ் சிறந்த
மைப்ப ஒரு நிழல் வேண்டிங்
கள் போலோங்கி ஒரு நிழல் போ
ல் வாழியர் கோச்சோழன் வளங் காவிரிநாடன் கோழியர் கோக்கண்ட
ன் குலவு


பொது வெற்றி பெற்ற மன்னர்கள் வெற்றி பெற்ற பகுதியில் கோயிலுக்குக் கொடை அளிப்பார்கள். ஆனால் ஆதித்தன் பெருவழியைப் புதுப்பித்து அதற்கு தன் பெயரை வைத்துள்ளான். அதற்குக் காரணமுண்டு. கொங்கு நாட்டின் மீது நடந்தும் படையெடுப்புகள் அனைத்தும் கொங்குப் பெருவழிகளையும் பருவங்களையும், வாணிக நகரங்களையும் தங்கள் ஆதிக்கத்தில் வைத்திருக்கவே ஆகும். இது சங்ககால மூவேந்தர் படையெடுப்பிலும் விளக்கம் பெறும். ஆதித்தன் கொங்கு வெற்றி பெருவழி ஆதிக்கத்தைக் குறிப்பதாகலாம்.

வட்டெழுத்து ஏன்?
சோழர்கள் அரசு எழுத்தாகத் தமிழ் எழுத்தையே பயன்படுத்தினர். இந்தக்கல்வெட்டில் பெயரையும், வெண்பாப் பாட்டையும் வட்டெழுத்திலும் பெயரை மட்டும் தமிழ் எழுத்திலும் வடித்துள்ளனர். வட்டெழுத்துப் பொறிப்பு பிழையின்றி எழுதப்பெற்றுள்ளது. ஆனால் தமிழ் பொறிப்பு தவறுடன் எழுதப் பெற்றுள்ளது. அதனால் கொங்கு நாட்டில் வட்டெழுத்து பயிற்சியே மிகுதி என்பது புலப்படும். கி..பி 4-5 ஆம் நூற்றாண்டு ஓட்டுப் பொறிப்பு வட்டெழுத்தில் அமைந்துள்ளது. கொங்கு நாட்டிற்கு பழக்கமான வட்டெழுத்தையே சோழர்கள் பயன்படுத்தினர். காலம் செல்ல தமிழ் எழுத்திற்கு மாற்றிவிட்டனர்,

நிழல் என்பது என்ன?

இந்தக் கல்வெட்டில் மூன்று இடங்களில் நிழல் என்ற சொல் குறிக்கப் பெறுகின்றது, இதன் உண்மையான பொருள்தான் என்ன? கேரளத்து செப்பேடுகளிலும், கல்வெட்டுகளிலும் இச்சொல் பயன்படுத்துப்பெறுகின்றது. ஏழு நூற்றுவர் நிழல், முன்னூற்றுவர் நிழல் என்ற கூறும் போது அரசனுக்குப்பாதுகாப்பாக செல்லும் இரகசியப் படை (------------ army) என்று பொருள் கொள்ளவும் பெறுகின்றது. இந்தப் பெருவழிக் கல்வெட்டில் பயின்று வரும் நிழல் என்ற சொல்லும் இரகசியப் படையைக் குறித்திருக்க வாயுப்புண்டு.


சோழர்கள் கொங்கு நாட்டை மூன்று பிரிவாகப் பிரித்தனர். (1) கொங்கான வீரசோழ மண்டலம் (இதற்கு அதிராஜராஜ மண்டலம் என்றும் பெயர் உண்டு.) காவிரிக்கு மேற்கேயும், மேற்குத் தொடர்ச்சி மலைக்குக் கிழக்கேயும் அமைந்துள்ள பகுதி வடகொங்கு என்றும், தென் கொங்கு என்றும் இருப்பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. கொங்கான வீரச்சோழ மண்டலம் கிழக்கே சிங்களாந்தபுரம் வரை பரவியிருந்தது. இன்றைய நாமக்கல் மாவட்டம் கரூர் மாவட்டம் ஆகியவை வீரசோழ மண்டலத்தில் அடங்கியிருந்தது. இந்தப் பகுதி சோழர்களின் நேரடி ஆட்சியிலிருந்தது.

மண்டலப்பிரிவுங்கூட குறிப்பிட்ட வேளாண் பருவநிலையைப் பொருத்து அமைந்தது என்பர். குறிப்பிட்ட மண்டலத்தில் குறிப்பிட்ட வேளாண் பயிரே விளைவிக்கப் பெறும். அந்த விளைச்சலுக்கேற்றாற் போல் வரியும் விதிக்கப் பெற்றது. சோழர் வரிவிதிப்பில் விகற்பங்கள் மிகுந்து காணப்பெற்றன. எல்லாப் பகுதிகளில் வாங்கப்பெற்ற வரிகளின் எண்ணிக்கை ஏழு மட்டுமே. ஐம்பதுக்கும் மேற்பட்ட வரிகள் எல்லாப் பகுதிகளிலும் வாங்கப் பெறவில்லை.

பராந்தகன் முயற்சி
முதலாம் பராந்தகனின் ஆட்சியில் பிற்பகுதி குழப்பமும் மிகுந்ததாக விளங்கியது, தக்கோலப் போரில் இராஜாதித்தன் கொல்லப்பட்டான். தொண்டை மண்டலம் கைவிட்டுச் சென்றது. பாண்டியர்கள் சோழர் ஆட்சியை வீழ்த்தினர். இந்த நெருக்கடியான சூழ்நிலையில் கொங்கு நாட்டை கயாபதி பெற்ற சிற்றரசர்களிடம் ஒப்படைத்தான். இப்பகுதியில் (வடகொங்கு இன்றைய வடகோவை வட்டம், அவினாசி வட்டம், ஈரோடு மாவட்டம், திருப்பூர் மாவட்டம், திண்டுக்கல் மாவட்டத்தில் பழனிப்பகுதி ஆகியவற்றை உள்ளடக்கி நின்றது. தென் கொங்கு இன்றைய தென்கோவை வட்டம், பொள்ளாச்சி வட்டம், உடுமலைப்பேட்டை வட்டம் மேற்குப் பழனிப் பகுதி ஆகிய பகுதிகளை உள்ளடக்கி நின்றன.

பராந்தகன் காலத்திலேயே வடகொங்குப் பகுதியில் கோநாட்டு மரபினைச் சேர்ந்த இருக்கு வேளிர்களை குறுநில மன்னர்களாக நியமித்தான். முதல் மன்னன் பெயர் வீர சோழப் பெருமானடிகள் என்ற பெயர் பெற்றிருந்தான். வீரசோழன் என்ற பெயர் முதல் பராந்தகனுக்கே உண்டு. இவன் ஆட்சி  947–ல் தொடங்குகின்றது இவனைத் தொடர்ந்து கலிமூர்க்கப் பெருமாள், முதலாம் விக்ரமசோழன் ஆகியோர் தங்களை கோநாட்டான் என்றே அழைத்துக் கொண்டனர். கொங்குச் சோழரில் முதலாம் குலோத்துங்கள் காலம் வரை சோழர்களுக்கு கீழ்படிந்து நின்றனர், மூன்றாம் வீரசோழன் (1158-96) காலத்திருந்து கொங்குச் சோழர்கள் பாண்டிய பக்கம் சாய்ந்து விட்டனர். பெண் கொள்வினை, கொடுப்பினைகள் நிகழ்ந்தன. வட கொங்கு 947 முதல் 1305 வரை கொங்குச் சோழர் ஆட்சியில் இருந்தது.

தென்கொங்கு
தென்கொங்கு மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டி அமைந்திருப்பதால் குறிஞ்சி, மருதம் ஆகிய திணைகளின் இயல்புகள் உள்ளன. வடகொங்கில் இருபது நாட்டுப் பிரிவுகள் இருந்தன. தென் கொங்கில் ஏழு நாட்டுப் பிரிவுகள் இருந்தன. தென்கொங்கு வீரசோழர் என்ற அரசமரபினர் ஆட்சி செய்துள்ளனர். இவர்கள் கி.பி.10 ஆம் நூற்றாண்டிலிருந்து ஆட்சி செய்துள்ளனர். தென்கொங்கு நீர்வளம் மிக்க பகுதி. ஆற்றின் குறுக்கே அணைகளைக் கட்டி வேளாண்மையை வளர்த்தனர். தென் கொங்கில் இருபதுக்கும் மேற்பட்ட பட்டபிரம்ம தேயங்கள் உருவாக்கப் பெற்றிருந்தனர். வடகொங்கில் பிரம்மதேயங்கள் குறைவே கி.பி. 6 ஆம் நூற்றாண்டிலிருந்து தென்கொங்கில் பிரம்மதேயங்கள் உருவாகிவிட்டன என்பதற்கு காரமடை செப்பேடுகளும், குமரலிங்கம் செப்பேடுகளும் சிறந்த சான்றுகள். பிரம்ம தேயங்கள் காட்டுப்பகுதியில் உருவாக்கப்பட்டன என்பதற்குப் பல கல்வெட்டுகள் சான்று பகற்கின்றன.

சோழர் கொங்குச் சோழர் மண உறவு
பிரம்மியம் என்ற ஊரில் கிடைக்கும் கல்வெட்டு ஒன்றில் விக்ரமசோழன் தேவியார் இறந்தமையால் பிரம்மாதிக்க தேவ நிலைசார்த்தி நந்தா விளக்கு ஒன்று வைத்தது பற்றிக் குறிப்பிடுகின்றது. விக்ரம சோழன் மாதேவி என்பவள் முதலாம் இராசேந்திர சோழனின் மகள் ஆவார். முதலாம் இராசேந்திரனுக்கு விக்கிரமன் என்ற  பெயரும் உண்டு. அவன் பெயரையே மூன்றாவது கொங்குச் சோழன் தனக்கு வைத்துக் கொண்டான். கிருக்கு வேளிர்க்கும் சோழர்களுக்கும் பல நூற்றாண்டுகள் மணவிணை உறவு நிலை பெற்றிருந்தது. விக்ரம சோழன் (கி.பி.1024-46) சோழப் பேரசர்க்கு கீழ்ப்படிந்து ஆண்டான்.
தஞ்சைச் சோழர் நேரடி ஆட்சியிலிருந்த சேலம் கரூவூர் பகுதியில் சோழப் பேரரசின் -------- முறையே பின்பற்றப்பட்டிருந்தது. கொங்கான வீரசோழ மண்டலம் கொல்லிமலை நாடு, கிழங்க நாடு, வெங்கல நாடு, தட்டநாடு, அரைய நாடு, பூந்துறை நாடு என நாட்டும் பிரிவுகள் உருவாக்கப்பறிருந்தது.



ஊராட்சி
சோழர்கள் ஆட்சி ஏற்பட்ட பின்பும் கொங்கில் பண்டைய ஊராட்சி முறையே நிலை பெற்றிருந்தது. வேட்டுவரில் வேளாண், மருதங்க வேளாண், கருவூர் ---- வேளாண் போன்ற பெயர்களைக் குறிப்பிடலாம். வேட்டுவர் மரபில் நிலைப்பெற்றிருந்த குழுத்தலைவர்களே அந்தந்த ஊர் வேளாண்களாக சோழர்களால் மாற்றப் பெற்றனர். சோழர் ஆட்சியின் தொடக்க நாட்களில் நாட்டுச்சபை உருவாக்கப் பெறவில்லை. பெரும் நாட்டுத் தலைவர்கள் ஆட்சியில் விடப்பெற்றிருந்தது. பண்டைய காலந்தொட்டு நிலை பெற்றிருந்த ஊராட்சி முறையே மேலோங்குகின்றது.

காடுகொன்று நாடாக்கி
     சோழர் ஆட்சிக்கு முன்பே கொங்கில் வேளாண்மை நடைபெற்று இருந்தாலும் அது மாற்றிச் செய்யும் வேளாண்மையே. இந்தவகை வேளாண்மையை Shifting Cultivation என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள். கொங்கில் ஒறிச்சில் என்ற விகுதியுடன் ஊர்ப்பெயர்கள் கல்வெட்டுகளில் குறிக்கப்பெறுகின்றன. இந்த விகுதி தீயிட்டுக் காடழிச்சி வேளாண்மை செய்ததை குறிப்பிடுகின்றது.

பூலாங்குறிச்சி கல்வெட்டும் கொங்கநாட்டு மங்குகாலாசமுந் தோட்டங்களும் என்று கால்நடை வளர்ப்பினையும், தோட்ட வேளாண்மையையும் குறிப்பிடுகின்றது. கால்நடை வளர்ப்பும் தோட்ட வேளாண்மையும் ஒன்றிற்கொன்று துணை நிற்பவை. கொங்கு நாட்டில் நீர்நிலைகள் உருவாக்கப் பெற்றிருந்தாலும் அவை கால்நடை வளர்ப்பிற்குப் பயன்படுத்தப் பெற்றன. புஞ்சை வேளாண்மைக்கும் பயன்படுத்தப் பெற்றன.


     கிபி. 10ம் நூற்றாண்டிற்குப் பின்தான் வேளாண் விரிவாக்கம் மிகுதியாயிற்று. பழங்குடிகள் காடழிந்து வேளாண்மை செய்ததால் பத்தில் ஒரு பங்கு வரி விதிக்கப்பெற்றது. தொடக்கத்தில் வேளாண்மை செய்தால் முதல் மூன்றாண்டுகளுக்கு வரி இல்லை. இந்த வேளாண்மைக்கு குமரிவேளாண்மை என்று கல்வெட்டுகள் கூறும். புதிதாக ஆட்சிக்கு கொண்டுவரப் பெற்றப்பகுதிகளில் வேளாண்மையை வளர்ப்பதற்குப் பெருமுயற்சி எடுத்துக் கொண்டனர். அதனால் கொங்குநாட்டுப் பழங்குடிகள் வேளாளர்களாக மாறினர். வேடர், வேட்டுவர், காவலர், மாவலர், பூலுவர் போன்ற பழங்குடிகள் வேளாளர்களாக மாறினர். மாறவும் அவர்கள் இடங்கை சாதியில் வைக்கப் பெற்றனர். அதனால் கொங்கு நாட்டுக் கல்வெட்டுகளில் இடங்கை தொண்ணூற்றுச்  சாதியாலே குறிக்கப்பெற்றனர். வலங்கைப் பிரிவினர் விஜயநகரக்காலம் முதல் குறிக்கப் பெறுகின்றனர். 

கருத்துரையிடுக

2 கருத்துகள்

  1. வேட்டுஒர்டளை கொங்கன்.எனப்படும் சேரன்
    காளஹஸ்தியில் இருந்து கொணர்நது குடி வைத்து உள்ளான்

    பதிலளிநீக்கு

தொடர்புக்கு

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

இதுவரை இந்த வலைப்பூவுக்கு வந்து வாசித்தவர்கள்