பஞ்சலிங்கேஸ்வரர் கோயில்

1 / 5
Caption Text
2 / 5
Caption Two
3 / 5
Caption Three
4 / 5
Caption Four
5 / 5
Caption Four

#ஹொய்சாளர் கட்டிடக்கலை #தமிழர் கட்டிடக்கலை மரபில் இருந்து மாறுபட்டு காணப்படுகிறது தமிழக கோயில்களில் ஒரு கருவறை அமைத்து அதன் மேல் விமானத்தில் ஒவ்வொரு தலங்களாக கூட்டிக் கொண்டு செல்வார்கள் ஒன்று முதல் பதினைந்து தளங்கள் வரை தமிழகத்தில் கிடைக்கிறது
ஹொய்சாளர்கள் கோயில்களில் விமானங்கள் ஒரே உயரமாக இருக்கும் ஆனால் கருவறை ஒன்று முதல் ஐந்து வரை கட்டப்பட்டுள்ளது ஏக (1) கூட தூவி (2) கூட திரி (3) கூட சதுர் (4) கூட பஞ்ச (5) கூட என ஐந்து வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது பஞ்சலிங்கேஸ்வரர் கோயில் கோவிந்தநஹள்ளி கே.ஆர். பேட் தாலுகா, , மான்டியா மாவட்டத்தில் அமைந்துள்ளது
ஹொய்சாளர் மன்னர் வீர சோமேஸ்வரர் காலத்தில் 12 ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் கட்டப்பட்ட ஒரு அற்புதமான கோயில் ஹொய்சாளர்கள் கலைப்பாணியில் தங்களுக்கென்று தனி முத்திரை பதித்த சிற்பிகள் பலர் அதில் ஒருவர் இந்த கோயிலைக் கட்டிய சிற்பி ராவரி மல்லிதம்மா இவர் பல கோயில்களை கட்டி உள்ளார் என்று கல்வெட்டுகள் மூலம்
தெரியவருகிறது இந்த கோயிலின் மொத்த நீளம் 140 அடி அகலம் 63 அடி நவரங்க மண்டபத்தின் மொத்த நீளம் 120 அடி அகலம் 20 அடி இந்தக் கோயிலில் 5 கருவறைகள் நேர்கோட்டில் காணப்படுகிறது ஐந்து கருவறைகளில் லிங்கத் திருமேனிகள் காணப்படுகிறது
சிவன் கோயிலாக இருந்தாலும் வெளிப்புற சுவர்களில் பெரும்பாலும் விஷ்ணுவின் அவதாரங்கள் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளது இந்தக் கோயிலில் 24 வகையான விஷ்ணு சிற்பங்கள் காணப்படுகிறது நவரங்க மண்டபங்களில் முப்பத்தி நான்கு தூண்கள் நேர் வரிசையில் நிறுத்தப்பட்டுள்ளது
நவரங்க மண்டபத்தை தனித்துக் காட்டுவதற்காக மூன்று இன்ச் அளவிற்கு உயர்த்தி காட்டப்பட்டுள்ளது இங்கு மகிஷாசுரமர்த்தினி சிற்பம் விநாயகர் சிற்பம் முருகர் சிற்பம் சப்தமாதர்கள் சிற்பம் என அழகு வாய்ந்த சிற்பங்கள் கோவிலில் நவரங்க மண்டப சுவர்களில் காணப்படுகிறது இங்குள்ள இரண்டு நுழைவு வாயில்களில் அற்புத வேலைப்பாடுகளுடன் அமைந்த நந்தி சிற்பங்கள் கொள்ளை அழகு அற்புதமான கோயிலுக்கு வாய்ப்பு கிடைக்கும்போது சென்று வாருங்கள்

கருத்துரையிடுக

0 கருத்துகள்

தொடர்புக்கு

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

இதுவரை இந்த வலைப்பூவுக்கு வந்து வாசித்தவர்கள்