ஆவணம் இதழ் 24 வெளியிட்டு விழா

தமிழகத் தொல்லியல் கழகத்தின் 23 ஆம் ஆண்டுக் கருத்தரங்கு மற்றும் ஆவணம் இதழ் 24 வெளியிட்டு விழா ஆகியவை 2013 ஜூலை மாதம் 21,22 சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் விழுப்புரம் கே கே கே சி பீ திருமண மண்டபத்தில் நடைப்பெற்றதுநான்கு நாட்கள் இலவச கல்வெட்டு மற்றும் தொல்லியல் அறிமுக வகுப்புகளும் , பயிற்சியில் கலந்து கொண்டவர்களுக்கு வெள்ளிக் கிழமை அன்று கீழ்வாலை மண்டகப்பட்டு ஆமாத்தூர் பனைமலை போன்ற இடங்களுக்கு சுற்றலாவுக்கு அழைத்துசென்றார்கள் மங்கையர்கரசி வீரராகவன் அவர்கள்.ஞாயிறு கிழமை காலை எண்ணாயிரம், பிரம்மதேசம், எசலாம், சிந்தமணி நல்லூர் அனைத்து தொல்லியல் அறிஞர்களுடன் சுற்றுலா சென்றது மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

இராஜேந்திர சோழனுடைய செப்பேடுகள் சமீபத்தில் தென் ஆற்காடு மாவட்டம் விழுப்புரம் வட்டம் ஏசாலம் என்ற கிராமத்தில் கிடைத்தமை அனைவரும் அறிந்ததே. இந்த ஏசாலம் என்ற கிராமத்திற்கு அருகில் எண்ணாயிரம் என்ற ஊர் உள்ளது. தமிழ்ப் புலவர்களில் சிறப்பு வாய்ந்த காளமேகப் புலவர் இந்த எண்ணாயிரம் கிராமத்தில் பிறந்தவர் என காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் கோயில் கோபுரத்தில் உள்ள ஒரு கல்வெட்டு கூறுகிறது. இந்த எண்ணாயிரம் என்ற கிராமத்தில் இராஜராஜன் காலத்தில் ஒரு பெரிய கோயில் எடுக்கப்பட்டிருந்தது. இப்பகுதியையே இராஜராஜ சதுர்வேதிமங்கலம் என்று இராஜராஜன் பெயரிட்டிருந்தான். இராஜேந்திரசோழன் இங்கு ஒரு பெரிய கல்லூரியை நிறுவி அங்கு வேதம் இலக்கணம் சாத்திரங்களை முறையாகப் படிக்க வழி வகை செய்திருந்தான். ஏசாலம் கிராமத்திற்கு அருகில் பிரம்மதேசம் என்ற ஊர் உள்ளது. அங்கும் சோழர் காலத்துக் கோயில்கள் இருக்கின்றன. எண்ணாயிரம் ஏசாலம் பிரம்மதேசம் ஆகிய இந்தப் பகுதிகள் முழுவதுமே சோழர் காலத்தில் மிகச் சிறந்த பகுதியாகத் திகழ்ந்திருக்கின்றன.
இச்சிறப்பு வாய்ந்த பகுதியில் சிவபெருமானுக்கு திருஇராமேச்வரம் என்ற பெயரில் ஒரு கோயிலை இராஜேந்திர சோழனுடைய இராஜகுரு சர்வசிவபண்டிதர் என்பவர் கட்டினார். இக்கோயிலுக்கு இராஜேந்திரசோழன் ஒரு ஊரை தானமாக அளித்துள்ளான். இந்த தானத்தை இராஜேந்திர சோழன் காஞ்சீபுரத்தில் தன்னுடைய அரண்மனையில் குளிக்கும் மாளிகயில் இருந்த போது தானம் செய்தான் என்று அறிகிறோம். இதனைக் குறிக்கும் செப்பேடுதான் இப்போது ஏசாலம் கிராமத்தில் இராமேச்வரம் கோயிலில் உள்ள பிராகாரத்தில் பூமிக்கடியில் இருந்து கிடைத்தது.

குறிப்பாக தஞ்சாவூரில் இராஜராஜ சோழன் பெரிய கோயிலைக் கட்டிய பகுதிகளையும் கங்கை கொண்ட சோழபுரத்தில் இராஜேந்திர சோழன் கங்கை கொண்ட சோழீச்சவரம் என்னும் பெரிய கோயிலைக் கட்டியதையும் இந்தச் செப்பேடுகள் குறிக்கின்றன. இந்தச் செப்பேட்டில் இவை இரண்டும் மிகவும் அருமையாக குறிக்கப்பட்டுள்ள செய்திகளாகும். அப்பகுதியை குறிக்கும் இடத்தை இரண்டு மூன்று தடவை திருப்பித் திருப்பி படித்தார்கள். அத்துடன் இராஜேந்திர சோழன் காஞ்சிபுரத்து மகாசாலையில் இருந்த அறிஞர்களுக்கு ஏராளமான தானம் அளித்த இராஜேந்திர சோழன் காஞ்சீபுரத்தில் தனது அரண்மனையில் தனது குளிக்கும் சாலையில் இருந்த சமயம் ஏசாலம் கிராமம் கோயிலுக்கு நிலம் தானம் செய்தான் என்று செய்தியை ஏசாலம் செப்பேடு கூறுகிறது. அரசன் இட்ட ஆணையை அவனது ஒலை எழுதும் மும்முடி சோழன் என்பவன் எழுதினான். அவன் எழுதிய வாசகம் சரியாக இருக்கிறதா? இல்லையா? என நான்கு அதிகாரிகள் ஒப்பிட்டுப் பார்த்தனர். சாவூர் பரஞ்சோதி, அணிமூரி நாடாழ்வான், உத்தமசோழ பிரும்மாதிராயன், உத்தமசோழ சோழகோன் என்று அந்நால்வரின் பெயரும் குறிக்கப்பட்டுள்ளன.
அதில் குறிப்பிட்டுள்ளபடி நடக்க வேண்டும் என இராஜேந்திர சோழ பிரும்மாதிராஜன் ஆணையிட்டான். இவன் அரசனுக்கு மந்திரியாகவும் சேனைத் தலைவனாகவும் திகழ்ந்தான். இவன் ஆணைப்படி ஓலையை எடுத்துக் கொண்டு அரங்கன் பனிச்சை என்பவனும் கிருஷ்ணபட்டன் என்பவனும் அரண்மனையிலிருந்து ஏசாலம் என்ற ஊருக்குச் சென்றனர். அந்த ஓலையில் அரசனுடைய மெய்க்கீர்த்தியும் அவன் கொடுத்த தானமும் ஊரார் என்ன செய்ய வேண்டும் என்பதும் எழுதப்பட்டிருந்தது. அந்த ஓலையை "திருமுகம்" என்று அழைத்தனர். அவ்வோலை அவ்வூருக்கு வந்ததையும், ஊரார் அதை எப்படி பெற்றார்கள் என்பதையும், என்ன செய்தார்கள் என்பதையும் செப்பேடு அழகாகக் கூறுகிறது. அந்த செப்பேடு வாசகத்தை அப்படியே பார்ப்போம்.
"நாட்டோமுக்கு பிரசாதஞ் செய்தருளிவர நாட்டோமும் திருமுகம் கண்டு எழுந்து எதிர் சென்று தொழுது வாங்கி தலைமேல் கொண்டு எல்லை தெரித்துக் காட்டி பிடிசூழ்ந்து பிடாகை நடந்தது கல்லும் கள்ளியும் நாட்டி அறவோலை செய்தோம்" என்று ஏசாலம் நாட்டு மக்கள் அரசனின் ஆணையை மரியாதையாக எதிர் சென்று தொழுது பெற்று தலைமேல் கொண்டு வலம் வந்தனர். யானை மேல் ஏறி, கொடி ஒன்று கையில் ஏந்தி புதியதாக வகுக்கப்பட்ட ஊரை வலம் வந்து அவ்வூருக்கு எல்லையை வகுத்து, எல்லயைக்


குறிக்க எல்லைக் கற்களையும், பால் கள்ளிகளையும் எல்லைகளாக நட்டனர் என்பதையும் இதனால் அறிகிறோம்.
தொல்லியல் அறிஞர் மா.சந்திரமூர்த்தி அவர்கள் எசாலம் பற்றிய காணொளி தொகுப்பை காண இங்கே சொடுக்கவும்.

கருத்துரையிடுக

1 கருத்துகள்

தொடர்புக்கு

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

இதுவரை இந்த வலைப்பூவுக்கு வந்து வாசித்தவர்கள்